கொரோனா பரவல் அதிகரித்து வருவதையடுத்து புதுச்சேரி அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து புதுச்சேரி அரசு உத்தரவிட்டுள்ளது.
சமீபகாலமாக தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா உட்பட இந்தியா முழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப பெற்றோர் தயக்கம் காட்டி வருகின்றனர். இதனையடுத்து பள்ளிக்கு விடுமுறை அளிப்பது குறித்து சில மாநிலங்கள் தீவிரமாக ஆலோசித்து வந்தன.
அந்த வகையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து புதுச்சேரி அரசு புதிய அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. அதன்படி 1 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு மார்ச் 22 முதல் மே 31 வரை பள்ளி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் வாரத்தில் திங்கள் முதல் வெள்ளி வரை 5 நாட்கள் மட்டுமே இயங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.