கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத பள்ளிகள்… அதிரடி உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியர்!

அரசு அறிவித்த கொரோனா தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றாத இரண்டு தனியார் பள்ளிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தஞ்சை மாவட்டத்தின் பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. இதனையடுத்து பள்ளிகளில் கொரோனா பரவுவதை தடுக்க பல்வேரு நெறிமுறைகளை அரசு விதித்தது.
ஆனால் சில பள்ளிகள் அதனை பின்பற்றுவதில் அலட்சியம் காட்டி வருவதால் கொரோனாவால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கொரோனா தடுப்பு விதிகளை சரிவர பின்பற்றாத பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்க தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் உத்தரவிட்டார்.
அதன்படி, கொரோனா நெறிமுறைகளை சரியாக பின்பற்றாத கும்பகோணத்தில் உள்ள தனியார் பெண்கள் மேனிலைப்பள்ளிக்கு ரூ.12,000 ம், தஞ்சையில் உள்ள தனியார் பள்ளிக்கு ரூ.5000 ம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இரு பள்ளிகள் மீதும் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.