கடந்த 24 மணி நேரத்தில் 40,000 அதிகமானோர் கொரோனாவால் பாதிப்பு!

இந்தியாவில் கடந்த ஒரே நாளில் மட்டும் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 40,953 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சமீபகாலமாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் நேற்று முதன்முறையாக 40000 க்கும் அதிகமானோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,15,55,284 ஆக உள்ளது. நேற்று ஒரே நாளில் 188 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,59,558 ஆக உயர்ந்துள்ளது.
மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1,11,07,332 ஆக உள்ளது. நேற்று மட்டும் 23,653 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,88,394 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.