ஓபிஎஸ், ஈபிஎஸ் வேட்புமனுக்கள் ஏற்பு!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவுற்றது. வேட்பாளர்கள் தாக்கல் செய்யப்பட்ட வேட்புமனுக்கள் தேர்தல் அதிகாரிகளால் பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இதனையடுத்து, ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியவர்களின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாம் தமிழர் கட்சி திருவொற்றியூர் தொகுதி வேட்பாளர் சீமானின் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. இதுத்தவிர, கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், அமைச்சர் கடம்பூர் செ ராஜு ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன.