அந்த ஆண்டவனே நம்ம பக்கம் தான்! அண்ணாமலை ட்வீட்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் வேட்புமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றன.

இதில், அரவக்குறிச்சி பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் வேட்புமனு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது. தன் மீது உள்ள வழக்குகள் பற்றி உரிய விவரம் அளிக்கவில்லை என புகார் எழுந்ததால் அவரது மனுவை நிறுத்தி வைத்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

திமுக மற்றும் சுயேட்சை வேட்பாளர்கள் அவரது மனுவை ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று கோரிக்கை வைத்தனர். ஆனால், பரிசீலனைக்குப் பின் அவரது மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அண்ணாமலை அந்த செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து, “பயந்துட்டியா குமாரு? அந்த ஆண்டவனே நம்ம பக்கம் இருக்கான்” எனப் பதிவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *