ராணுவ கேண்டீன் போல மக்கள் கேண்டீன் திட்டம் – கமல்

மக்கள் நீதி மய்யத்தின் தேர்தல் அறிக்கையை அக்கட்சித் தலைவர் கமலஹாசன் வெளியிட்டுள்ளார். நிறைவேற்றக் கூடிய திட்டங்களையே நாங்கள் வாக்குறுதிகளாக கொடுத்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.
அதில், குடும்பத் தலைவிகளுக்காக திறன் மேம்பாட்டு பயிற்சி அளித்து அதன் மூலம் ஊதியம் வழங்கப்படும்.
ராணுவ கேண்டீனைப் போல் நியாய விலையில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்க மக்கள் கேண்டீன் திறக்கப்படும் என தெரிவித்துள்ளார். இதையும் அம்மா கேண்டீனையும் ஒப்பிட வேண்டாம்.
மேலும், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் 1000 ரூபாய், 1500 ரூபாய் என நிர்ணயிப்பதற்கு அவர்கள் யார்? என அதிமுக, திமுகவிற்கு கேள்வி எழுப்பியுள்ளார்.