தேவேந்திர குல வேளாளர் மசோதாவுக்கு மக்களவை ஒப்புதல்

மக்களவையில் இன்று தேவேந்திரகுல வேளாளர் மசோதா குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. பட்டியலினத்திலுள்ள ஏழு உட்பிரிவுகளைச் சோந்தவா்களை தேவேந்திரகுல வேளாளா் என பொதுப் பெயரிட இந்த மசோதா வகை செய்கிறது.

தமிழக அரசு அளித்த பரிந்துரையை ஏற்று மத்திய அரசு மக்களவையில் தாக்கல் செய்த மசோதா இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து இது மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட உள்ளது.

அரசியல் சாசனத்தில் செய்யப்படும் இந்தத் திருத்தம் தமிழகத்திற்கு மட்டுமே பொருந்தும். ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் கொண்டு வரும் வகையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழக அரசு வைத்த பரிந்துரையை ஏற்று ஆதிதிராவிடர் பட்டியலில் திருத்தம் செய்வதற்கான மசோதாவை மக்களவையில் இன்று மத்திய அரசு தாக்கல் செய்தது. அதன்படி, குடும்பன், காலாடி, பன்னாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் ஆகிய 7 உள்பிரிவினரை இணைத்து இனி தேவேந்திரகுல வேளாளர் என அழைக்கும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

பட்டியலில் மட்டுமே மாற்றம் செய்யப்படும்,பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள சலுகைகள் வழக்கம் போலவே தொடரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *