ஒரே நாளில் தமிழகத்தில் ஆயிரத்தை கடந்த கொரோனா தொற்று
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 1000-பேருக்கும் அதிகமாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பரவல் குறையத்தொடங்கியதை தொடர்ந்து, தளர்வுகள் அளித்து தமிழக அரசு உத்தரவிட்டது. தற்பொழுது கொரோனா பரவல் அதிகரிக்க தொடங்கிய நிலையில், இன்று மேலும் 1,087 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை 8,64,450 ஆக அதிகரித்துள்ளது.இதனால் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,83,11,295 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த டிசம்பர் மாதத்திற்கு பிறகு தற்போது பாதிப்பு எண்ணிக்கை 1000 பேருக்கும் மேலானோருக்கு ஏற்பட்டுள்ளது.
இதில் அதிகபட்சமாக சென்னையில் 421 பேருக்கு தொற்று உறுதியானது. மேலும், 569 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 8,45,178 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று 9 பேர் உயிரிழந்த நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12,582 ஆக உயர்ந்துள்ளது. அதுமட்டுமின்றி, மருத்துவமனையில் 6,690 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
செங்கல்பட்டு,கோவை,திருவள்ளூர் மற்றும் தஞ்சையிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.