3 கோடி பேர் மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது – ப. சிதம்பரம்

இந்தியாவில் 3 கோடி பேர் மட்டுமே கொரோனா தடுப்பூசி போட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம் கூறியுள்ளார்.

இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது.  கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனாவின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்தது. ஊரடங்கு கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

தற்போது கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

இது குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப. சிதம்பரம், ”நாட்டு மக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதில் மத்திய அரசு படுதோல்வியடைந்துள்ளது. இந்தியாவில் மீண்டும் கொரோனா அதிகரித்து வருவதில் எந்த ஆச்சரியமும் இல்லை. மற்ற நாடுகளுக்கு 5.9 கோடி கோரோனா தடுப்பூசி ஏற்றுமதி செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் இதுவரை 3 கோடி பேருக்கு மட்டுமே தடுப்பூசி போட்டுள்ளது ஏமாற்றமளிக்கிறது” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *