விவசாயிகளின் துயர் துடைப்பது அதிமுக தான் – முதல்வர்
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தேர்தல் பரப்புரைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அதிமுக சார்பில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று திருத்துறைப்பூண்டியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
திமுக ஆட்சி என்றாலே மின்வெட்டு தான். விவசாயிகளின் துயர் துடைக்கும் அரசு அதிமுக தான். தமிழகத்தில் உள்ள மாணவர்களில் 100 க்கு 49 பேர் உயர்கல்வி பயின்று வருகின்றனர். மீத்தேன் திட்டத்தை கொண்டு வந்தது திமுக தான். திமுக கொண்டு வந்த மீத்தேன் திட்டத்தை தடுத்து நிறுத்தியது அதிமுக தான்.
மேலும், இதுவரை விவசாயிகளுக்கு 1700 கோடி ரூபாய் நிவாரணமாக வழங்கப்பட்டுள்ளது. டெல்டா மாவட்டங்களை பாதுகாத்தது அதிமுக தான் என்று தெரிவித்துள்ளார்.