திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி மீது தேர்தல் ஆணையத்தில் அதிமுக புகார்

கரூர் திமுக வேட்பாளர் செந்தில் பாலஜி அரசு அதிகாரிகளை மிரட்டும் விதமாக பரப்புரை மேற்கொண்டு வருகிறார் என அதிமுக தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.
நேற்று கரூரில் பரப்புரை மேற்கொண்ட திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி,ஆற்றில் உங்கள் விருப்பப்படி மணல் அள்ளுங்கள் எந்த அதிகாரி கேட்டாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் என மிரட்டும் விதமாக பேசினார்.இதனையடுத்து அதிமுக இன்று அவர் மீது தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது.