தஞ்சாவூரில் மேலும் ஒரு பள்ளியில் கொரோனா தொற்று பாதிப்பு உறுதியானது!

தஞ்சாவூர் மாவட்டத்தில் மேலும் ஒரு பள்ளியில் ஒரு மாணவி உட்பட மூவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரத்தில் தஞ்சாவூா் அருகே அம்மாபேட்டையிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் ஒரு மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து அந்த பள்ளியில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் 2 ஆசிரியள் உட்பட 60 மாணவர்களுக்கு கொரொனா தொற்று பரவியிருப்பது உறுதியானது.

இதன் காரணமாக, மாவட்டத்தின் மற்ற பள்ளிகளில் உள்ள மாண்வர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. அதன்படி, தஞ்சாவூா் மகா்நோன்புசாவடியிலுள்ள தனியாா் பள்ளியில் இரு நாள்களாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 2 ஆசிரியா்கள் மற்றும் மாணவிக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 

இந்தியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் தஞ்சாவூரில் தொடர்ந்து கொரொனா தொற்று பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவது அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *