சாத்தான் குளம் கொலை வழக்கை 6 மாதத்தில் விசாரித்து முடிக்க உத்தரவு!

தூத்துகுடி மாவட்டம் சாத்தான் குளத்தை சேர்ந்த வியாபாரிகளான ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகிய இரண்டு பேரையும் காவல்துறையினரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விசாரணை முடிந்து கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்ட அவர்கள் இருவரும் மரணமடைந்தனர். இந்நிலையில், விசாரணையின் போது, கொடூராக தாக்கப்பட்டதால் தந்தை – மகன் என இருவரும் உயிரிழந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுரை உயர்நீதி மன்ற உத்தரவின் பேரில், இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. கொலைக்கு காரணமான இன்ஸ்பெக்டர் ஸ்ரீதரன் உள்ளிட்ட 10 பேர் மீது வழக்கு விசாரணை நடந்து வருகிறது.

இந்நிலையில், ஜெயராஜின் மனைவி செல்வராணியால் தொடரப்பட்டு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் உள்ள வழக்கின் விசாரணையை 6 மாதத்திற்குள் விரைந்து முடிக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளையின் நீதிபதி முரளிசங்கர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *