சந்திரசேகரன் நீக்கம்! அதிமுக அதிரடி

கடந்த 2016 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று சேந்தமங்கலம் தொகுதியில் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவர் சந்திரசேகரன். அவருக்கும் இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்கவில்லை. 

தனக்கு மீண்டும் சேந்தமங்கலம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டுமென்று அதிமுக தலைமைக்கு 3 நாட்கள் கெடு விதித்திருந்தார். ஆனால் இதனை அக்கட்சி தலைமை கண்டுக்கொண்டதாக தெரியவில்லை. 

இதனால், சேந்தமங்கலம் தொகுதியில் அதிமுக வேட்பாளார் சந்திரனை எதிர்த்து அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் சந்திரசேகரன் சுயேச்சையாக களமிறங்க முடிவு செய்துள்ளார். 

இதனையடுத்து, சந்திரசேகரனை அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குவதாக ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் இருவரும் சேர்ந்து அறிவித்துள்ளனர். கட்சி தலைமைக்கு எதிராக செயல்பட்டதால் இந்த முடிவை எடுத்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு சந்திரசேகரன், “கட்சியிலிருந்து நீக்கியது குறித்து கவலைப்படவில்லை. தொகுதி முழுவதும் அதிமுகவிற்கு வேட்பாளருக்கு எதிராக பிரச்சாரம் செய்வேன்” என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *