புதுச்சேரியில் கூட்டணியில் இருந்து விலகியது பாமக!

புதுச்சேரியில் பாஜக மற்றும் அதிமுகவின் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து பாமக கட்சி விலகியதாக அறிவித்துள்ளது.

பாஜக, அதிமுக வேட்பாளர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்ட நிலையில் பாமக விலகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகம், புதுச்சேரி உட்பட 5 மாநிலங்களுக்கு சட்டமன்ற தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் ஆணையம். இதில் புதுச்சேரியில் 30 சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அங்கு என்.ஆர். காங்கிரஸ் தலைமையில் பாஜக, அதிமுக மற்றும் பாமக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.  இதில் என்.ஆர்.காங்கிரஸ் 16, பாஜக 9 தொகுதிகளிலும், அதிமுக 5 தொகுதிகளிலும் போட்டியிடுவதாகம் அறிவிக்கப்பட்டது .

இதனால் அதிருப்தியடைந்துள்ள பாமக கட்சி, புதுச்சேரியில் என்.ஆர். காங்கிரஸ் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் விலகுவதாக அறிவித்துள்ளது. இதனையடுத்து  முதல் கட்டமாக 9 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்டுள்ளது. அறிவிக்கப்பட்டுள்ள 9 வேட்பாளர்களும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்யவுள்ளதாக புதுச்சேரி பாமக அமைப்பாளர் தன்ராஜ் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *