திமுக,மதிமுக பிரமுகர்களின் வீடுகளில் ஐ.டி ரெய்டு

திருப்பூர் தாராபுரத்தில் திமுக,மதிமுக பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் திமுக நகர செயலாளர் கே.எஸ் தனசேகர் திருப்பூர் மாவட்ட மதிமுக துணை செயலாளர் மற்றும் தொழிலதிபர் கவின் நாகராஜ் இவர்களின் இல்லத்தில் தற்போது வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தாராபுரம் தனித்தொகுதியில் திமுக சார்பில் வேட்பாளராக கயல் விழி என்பவர் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக மற்றும் மதிமுக பிரமுகர்களின் இல்லத்தில் சோதனை நடைபெறுவது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த தாராபுரம் தொகுதியில் தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.