தமிழகத்தில் ஒரே நாளில் 945 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 945-பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த சில நாட்களாகவே கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.இதனால் கொரோனா இரண்டாம் அலை வீசுகிறதா என்ற ஐயம் எழுந்துள்ளது.தேர்தல் தேதி அறிவித்த பிறகு தினசரி கொரோனா தொற்று சீராக அதிகரித்து வருகிறது.இதற்கு தேர்தல் பொதுக்கூட்டங்களிலும்,பிரச்சாரங்களிலும் யாரும் கொரோனா விதிமுறைகளை கடைபிடிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது.இந்த நிலை தொடர்ந்தால் தமிழகத்தில் மீண்டும் தினசரி பாதிப்பு 1000 பேருக்கு மேலாக அதிகரிக்கக் கூடும் என்ற அச்சமும் உருவாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இதுவரை கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8,62,374-ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் இதுவரை மொத்தம் 2,39,878-பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகம் முழுவதும் இதுவரை தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 8,43,999-ஆக உள்ளது.
இன்று வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 7 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது.