கொரோனா இரண்டாவது அலையை தடுக்க வேண்டும் – மோடி
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகையே உலுக்கி விட்டது. பல நாடுகள் தீவிர கொரோனா பரவலில் இருந்து மீண்டு வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில், கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பல்வேறு நடுகளில் தீவிரமாக பரவி வருகிறது.
இந்தியாவிலும் கொரோனா வைரஸின் இரண்டாவது அலை பரவி விடுமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்துள்ளதால், பிரதமர் மோடி அனைத்து மாநில முதல்வர்களுடன் கானொலி வாயிலாக ஆலோசனை நடத்தியுள்ளார்.
அதில், இந்தியாவில் கொரோனா அதிகரிப்பதை நல்லாட்சிக்கான சோதனையாக கருதுகிறேன். கொரோனா பரவலைத் தடுக்க தகுதியுள்ள அனைவரும் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும். இரண்டாவது அலையை தடுக்க அனைவரும் இணைந்து பணியாற்ற வேண்டும் என தெரிவித்துள்ளார்.