ஆண்டு வருமானம் ரூ.1000… கலாய்த்த நெட்டிசன்கள்… புதிய பிரமாணப்பத்திரம் தாக்கல்!
சீமானின் ஆண்டு வருமானம் ரூ.1000 என தவறாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில் இன்று புதிய பிராமணப் பத்திரத்தை அக்கட்சியினர் தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் திருவொற்றியூர் தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். அப்போது தாக்கல் செய்த சொத்து விவரங்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தில் 2019-2020-ல் சீமானின் ஆண்டு வருமான வெறும் ரூ.1,000 என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஆண்டு வருமானம் ரூ.1,000 என்றால் அவரது ஒருநாள் வருமானம், ரூ.2.77 பைசா தானா என்று நெட்டிசன்கள் பலரும் விமர்சித்து வந்தனர். இதனையடுத்து பிரமாண பத்திரத்தில் எழுத்துப்பிழை ஏற்பட்டுள்ளதாகவும், திருத்தப்பட்ட புதிய பிரமாண பாத்திரம் இன்று திருவொற்றியூர் தேர்தல் அலுவலரை சந்தித்து சீமான் சார்பில் அக்கட்சியின் நிர்வாகிகள் தாக்கல் செய்யவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.