மதுரை காமராஜர் பல்கலை கழகத்திற்கு A++ தரச்சான்றிதழ்!
மதுரையில் உள்ள காமராஜர் பல்கலை கழகத்திற்கு A++ தரச்சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த மார்ச் 5,6,7 தேதிகளில் 11பேர் கொண்ட தேசிய தர மதிப்பீடு மற்றும் அங்கீகாரக்குழு மதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் ஆய்வு மேற்கொண்டது. பொதுவாக ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை இந்த குழுவானது கல்லூரிகள் மற்றும் பல்கலை கழகங்களில் அடிப்படை வசதிகள், தொழில்நுட்ப வசதிகள், கற்றல், கற்பித்தல் ஆகியவற்றை ஆய்வு மேற்கொண்டு தர மதிப்பீடு வழங்கும்.
இந்த நிலையில் காமராஜர் பல்கலைகழகத்தில் ஆய்வு செய்த நாக் (NAAC) குழுவினர் ஏ++ தரச்சான்றிதழ் வழங்கியுள்ளனர். ஏற்கெனவே ஏ+ அங்கீகாரம் பெற்றிருந்த அப்பல்கலை கழகம் தற்போது தரம் உயர்த்தப்பட்டுள்ளது.