மக்கள் நீதி மய்யத்தின் இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
மக்கள் நீதி மய்யத்தின் சார்பில் 24 தொகுதிகளுக்கான மூன்றாம் கட்ட இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.
தமிழக தேர்தல் களம் தற்போது பரபர என்று இயங்கி கொண்டிருக்கிறது. அதிமுக, திமுக உட்பட பலக்கட்சிகளும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுவிட்டன. அதே நேரத்தில் மற்ற கட்சிகளின் வேட்பாளர்களை பார்த்து தங்கள் கட்சிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டு வருகின்றனர்.
கமல்ஹாசன் தலைமையிலான மக்கள் நீதி மய்யத்துடன் சமத்துவ மக்கள் கட்சியும், இந்திய ஜனநாயக கட்சியும் கூட்டணி அமைத்துள்ளன. அந்த இரண்டு கட்சிகளும் தலா 40 தொகுதிகளில் போட்டியிடும் என்றும், மக்கள் நீதி மய்யம் 154 தொகுதிகளில் போட்டியிடும் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த 10ம் தேதி தேர்தலில் மநீம கட்சியின் சார்பில் போட்டியிடும் 70 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை வெளியானது. இதையடுத்து, கடந்த 12ம் தேதி 43 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தற்போது ஆயிரம் விளக்கு, திருவாரூர் உட்பட 24 தொகுதிகளுக்கான மக்கள் நீதி மய்யம் சார்பில் போட்டியிடும் மூன்றாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது.