டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது இங்கிலாந்து அணி!

இந்தியாவுக்கு எதிரான 3-வது டி20 ஆட்டத்தில் டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான 5 போட்டிகள் இருபது ஓவர் தொடரில் முதல் இரு போட்டிகளில் இரு அணியும் தலா ஒரு வெற்றிகள் பெற்றுள்ளது.

இந்நிலையில் அகமதாபாத்தில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் இன்று  3-வது டி20 ஆட்டம் இன்று  நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணியின் கேப்டன் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார். அதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *