காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் இளைஞர்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவிப்புகள்!
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அனைத்து கட்சிகளும் பரப்புரைகளிலும், தேர்தல் அறிக்கைகளை வெளியிடுவதிலும் மும்முரமாக இயங்கி வருகின்றன.
திமுக, அதிமுக என இரு பெரும் மாநில கட்சிகளும் தங்கள் தேர்தல் அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. இதனையடுத்து, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
அதில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள்
ஆணவப் படுகொலையைத் தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வரப்படும்.
புதிதாக தொழில் முனைவோருக்கு குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் வரிச்சலுகை அளிக்கப்படும்.
மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு 10% ஆக உயர்த்தப்படும்.
வேளாண் பாதுகாப்பிற்காக புதிய மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை.
அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.
வேளாண் பாதுகாப்பிற்காக புதிய மசோதா கொண்டுவந்து நிறைவேற்ற நடவடிக்கை.அதிமுகவில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஒப்பந்தக்காரர்கள் கூட்டணி அமைத்து ஒப்பந்தங்களைத் தொகுப்பதற்கு வழிவகுத்த விதிகள் மாற்றியமைக்கப்படும்.