என்னை கொலை செய்ய பா.ஜ.க சதி வேலை செய்கிறது மம்தா பரபரப்பு குற்றச்சாட்டு

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி சில நாட்களுக்கு முன்பு நந்திகிராமில் தாக்கப்பட்டார்.இதனையடுத்து மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட அவர் தற்போது சக்கர நாற்காலியில் அமர்ந்து தேர்தல் பரப்புரையை மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் இன்றைய தேர்தல் பரப்புரையில் அவர், தன்னை கொலை செய்ய பா.ஜ.க சதி வேலை செய்து வருவதாக பரபரப்பான குற்றச்சாட்டை முன்வைத்தார்.தேர்தல் நாள் நெருங்கி வரும் நிலையில் மம்தாவின் இந்த குற்றச்சாட்டு வருகிற தேர்தலில் அவருக்கு சாதகமாக அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *