இங்கிலாந்து அணிக்கு 157 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இந்தியா!

அகமதாபாத்தில் நடைபெற்று வரும் 3வது இருபது ஓவர் கிரிக்கெட்டில் ஆடிய இந்திய அணி 157 ரன்களை இங்கிலாந்து அணிக்கு நிர்ணயித்துள்ளது.

இங்கிலாந்து – இந்தியா அணிகளுக்கு இடையேயான 3வது இருபது ஓவர் கிரிக்கெட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

அதனைத்தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 6 விக்கெட் இழப்பு 156 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக இந்திய அணி கேப்டன் விராட்கோலி 77 ரன்கள் அடித்துள்ளார். இங்கிலாந்து தரப்பில் மார்க் வுட் 3 விக்கெட்டுகளும், ஜோர்டன் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *