ஆத்தூர் தொகுதியின் திமுக வேட்பாளர் திடீர் மாற்றம்?
சேலம் மாவட்டம் ஆத்தூர் (தனி) தொகுதியின், திமுக வேட்பாளர் திடீரென மாற்றப்பட்டுள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்கான வேட்பாளர் பட்டியலை பெரும்பாலும் அனைத்து கட்சிகளும் அறிவித்து விட்டன.
திமுக சார்பில் தான் போட்டியிடும் 173 தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டது.
அதில், ஆத்தூர் தொகுதியில் திமுக சார்பில் ஜீவா ஸ்டாலின் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், திடீரென ஜீவா ஸ்டாலினுக்குப் பதில் சின்னதுரை போட்டியிடுவார் என திமுக தலைமை அறிவித்துள்ளது.
புகார் எழுந்ததால் ஜீவா ஸ்டாலினுக்குப் பதில் சின்னதுரை மாற்றப்பட்டுள்ளதாக திமுக தலைமை தெரிவித்துள்ளது.