மே 2 ம் தேதிக்கு பிறகு கமல் பிக்பாக்ஸில் இருப்பார் – வானதி சீனிவாசன்!
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் மே 2ஆம் தேதிக்கு பிறகு புதிய படத்தில் நடிக்கத் தொடங்குவார் அல்லது பிக்பாஸ் நிகழ்ச்சியில் வருவார் பாஜக மகளிரணி தேசியத் தலைவர் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசியல் களம் அனல் பறக்க தொடங்கிவிட்டது. ஏனென்றால் நட்சத்திர வேட்பாளர்கள் பலரும் வேட்பு மனு தாக்கல் செய்துவிட்டு களத்திற்கு சென்று பிரச்சாரத்தை தொடங்கி விட்டனர்.
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் வேட்புமனு தாக்கல் செய்தனர். காங்கிரஸ் சார்பில் மயூரா ஜெயக்குமார் களம் காண்கிறார். எனவே கோவை தெற்கு தொகுதி நட்சத்திர தொகுதியாக மாறியிருக்கிறது.
வேட்புமனு தாக்கலுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், கடந்த முறை தேர்தலில் தோற்ற பிறகும் கூட மக்களுக்கு தேவையான திட்டங்களை கொண்டு வந்துள்ளேன். டிவியில் தினமும் வந்துவிட்டால் ஓட்டு கிடைக்காது. அதனால் மே 2ஆம் தேதிக்கு பிறகு சகோதரர் கமல்ஹாசன் புதிய படத்திலோ அல்லது பிக் பாஸ் நிகழ்ச்சியிலோ இருப்பார் என விமர்சனம் செய்தார்.
இந்த முறை கோவை தெற்கு தொகுதி மிகவும் போட்டி நிறைந்த கொகுதியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.