நடிகர் அஜித்தின் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு காத்திருக்கும் சர்ப்ரைஸ்..
நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே 1ம் தேதியன்று வலிமை பட அப்டேட் வெளியாகும் என அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் தனது டிவிட்டர் பக்கத்தில் தகவல் வெளியிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் தமிழ் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்படும் படமாக வலிமை உள்ளது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் நடித்து வரும் திரைப்படம் கடந்த ஆண்டு தீபாவளி அன்று வெளியாக வேண்டியது.
ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக தடைப்பட்ட வலிமை படத்தின் படபிடிப்பு, படத்தின் வெளியீடு தள்ளிபோனது. அதோடு படத்திற்கான எந்த அப்டேட்டும் இல்லாமல் போனது. இதனால் அஜித் ரசிகர்கள் படத்தின் அப்டேட் குறித்து பல்வேறு இடங்களில் கேட்டு வந்தனர்.
மொயின் அலி முதல் வானதி சீனிவாசன் வரை அனைவரிடமும் அப்டேட் கேட்டு வந்த அஜித் ரசிகர்களுக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார். நடிகர் அஜித்தின் பிறந்த நாளான மே 1-ம் தேதியன்று வலிமை படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அஜித் ரசிகர்கள் டிவிட்டரில் #AK50 என்ற ஹேஸ்டேக்குடன் இந்த அப்டேட்டை டிரெண்ட் செய்து வருகின்றனர்.