5 ஆண்டுகளில் ரூ.3 கோடி உயர்ந்துள்ள மு.க.ஸ்டாலினின் சொத்து மதிப்பு!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் சொத்துமதிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து, தற்போது வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பல்வேறு அரசியல் கட்சி வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்து வருகின்றனர்.
இன்று கொளத்தூர் தொகுதியில் 3-வது முறையாக போட்டியிடும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், அயனவரத்தில் 6-வது மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் தாக்கல் செய்த வேட்புமனுவில் சொத்து மதிப்பு விவரங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ஆம் அசையும் சொத்து மதிப்பு ரூ.1,11,59,079 கோடியாக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு அசையும் சொத்து ரூ.5,25,37,646 கோடியாகி அசையும் சொத்தின் மதிப்பு ரூ.4,13,78,567 கோடியாக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2016-ஆம் ஆண்டு மு.க ஸ்டாலினின் அசையா சொத்து ரூ.4,72,43,882 கோடியாக இருந்த நிலையில், 2021-ஆம் ஆண்டு அதன் மதிப்பு ரூ.3,63,37,693 கோடியாகி அசையா சொத்தின் மதிப்பு ரூ.1,09,06,189 சரிவை கண்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினின் அசையும் சொத்து ரூ .22.28 கோடி எனவும் , அசையா சொத்து ரூ .6.54 கோடி எனவும் கூறப்பட்டுள்ளது . மொத்த சொத்து ரூ .28.82 கோடி என்றும் ரூ .1.35 லட்சம் கடன் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.