சி.ஏ.ஏ விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம் போடுகிறது – கி. வீரமணி!

சி.ஏ.ஏ விவகாரத்தில் அதிமுக இரட்டைவேடம் போடுவதாக திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

அதிமுக தேர்தல் அறிக்கையில் சி.ஏ.ஏ சட்டத்தை திரும்ப பெறுவோம் என்று கூறியுள்ளது. இதற்கு தற்போது பல்வேறு தரப்பிலிருந்தும் கடும் கண்டணம் எழுந்துள்ளது

இதுகுறித்து திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறுகையில், தேர்தல் அறிக்கையில் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை திரும்ப பெறுவோம் என்று கூறும் இதே அதிமுக அரசு தான் பாரளுமன்றத்தில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்த அச்சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தது.

தற்போது தமிழக சட்டமன்ற தேர்தலில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெறுவதற்காக, குடியுரிமைச் சட்டத்தை திரும்ப பெறுவோம் என்று அதிமுக கூறுகிறது. இதன் முலம் சி.ஏ.ஏ விவகாரத்தில் அதிமுக இரட்டை வேடம் போடுவது உறுதியாகி உள்ளதாக கி.வீரமணி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *