5 ஆண்டுகளின் எடப்பாடி பழனிசாமியின் சொத்துமதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளது!
தமிழக முதல்வர் எடப்பாடிபழனிசாமியின் சொத்து மதிப்பு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.1 கோடி அளவிற்கு குறைந்துள்ளதாக வேட்புமனுவில் தெரியவந்துள்ளது
எடப்பாடி பழனிச்சாமி தற்போது தனது சொத்து விவர மதிப்பை தாக்கல் செய்துள்ளார்.2016-ல் அவரது சொத்து மதிப்பு ரூ. 3.14 கோடியாக இருந்த நிலையில் தற்போது அது ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது.கடந்த தேர்தலைக் காட்டிலும் இந்த தேர்தலில் சொத்து மதிப்பு ரூ.1 கோடி குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது
தமிழகத்தில் அடுத்த மாதம் 6ம் தேதி நடைபெறும் சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ம் தேதி துவங்கியது. முதல் நாளில், துணை முதல்வர் பன்னீர் செல்வம் உட்பட, 59 பேர் மனு தாக்கல் செய்தனர்.
இரு நாட்கள் விடுமுறைக்கு பின் இன்று மீண்டும் வேட்புமனு தாக்கல் துவங்கியது. மதியம் 1 மணியளவில் முதல்வர் பழனிசாமி, எடப்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
இந்த நிலையில் வேட்புமனுவில் அவர் குறிப்பிட்டுள்ள சொத்து மதிப்பின் தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 2016-ல் ரூ.3.14 கோடியாக இருந்த அசையும் சொத்து மதிப்பு, 2021ல் ரூ.2.01 கோடியாக குறைந்துள்ளது.
அதேபோல், 2016-ல் ரூ.4.66 கோடியாக இருந்த அசையா சொத்துமதிப்பு 2021ல் ரூ. 4.68 கோடியாக உயர்ந்துள்ளது. மேலும், 2016-ல் ரூ.33 லட்சமாக இருந்த கடன் தற்போது ரூ.29.75 லட்சமாக குறைந்துள்ளது. என தகவல் வெளியாகியுள்ளது.