தேர்தல் தினத்தன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க உத்தரவு!
தொழிலாளர்களுக்கு தேர்தல் நாளான ஏப்ரல் 6ம் தேதியன்று ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க தொழிலாளர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதியன்று சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. எதிர்ப்பார்ப்பு மிகுந்த இந்த தேர்தலில் தமிழக வாக்காளர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர். ஆனால் தேர்தல் நாள் திங்கட்கிழமையில் வருவதால் பலரும் வாக்களிக்க முடியாமல் போகும் நிலை உள்ளது.
இதனைக் கருத்தில் கொண்டு தினக்கூலி, தற்காலிகம், ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டுமென தொழிலாளர் ஆணையம் தற்போது உத்தரவிட்டுள்ளது.