தஞ்சையில் ஒரே பள்ளியைச் சேர்ந்த 56 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி!

தஞ்சையில் ஒரே பள்ளியை சேர்ந்த 56 மாணவர்களுக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுக் காலமாக மூடியே இருந்த பள்ளிகள், கடந்த ஜனவரி மாதம் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மாணவர்களும் தினமும் பள்ளிக்கு சென்று கல்வி பயின்று வருகின்றனர்.இந்த நிலையில் தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டையில் அரசு உதவிப்பெறும் பெண்கள் பள்ளியில் உள்ள ஒரு ஆசிரியர் உட்பட 56 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளான அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும் பள்ளியில் உள்ள அனைத்து மாணவிகளுக்கும் கொரோனா பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரையும் கண்டுபிடித்து கொரோனா பரிசோதனை செய்யவும், மேலும் மாவட்டம் முழுவதும் இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *