ஐஎஸ்எல் 2021 : மும்பை சிட்டி எப்சி சாம்பியன்!!

ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி எப்சி 2-1 என்ற கோல் கணக்கில் ஏடிகே மோகன் பகான் அணியை வீழ்த்தி முதன் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கோவாவில் உள்ள பதோர்தா மைதானத்தில் நேற்று நடைபெற்ற இந்த ஆட்டத்தில் 18-வது நிமிடத் தில் ஏடிகே மோகன் பகான் அணி முதல் கோலை அடித்தது. ராய் கிருஷ்ணா உதவியுடன் பந்தை பெற்ற டேவிட் வில்லியம்ஸ் பாக் ஸின் மையப்பகுதியில் இருந்த உதைக்க கோலாக மாறியது.

29-வது நிமிடத்தில் மும்பை அணியின் அகமது ஜஹூ நடுப்பகுதியில் இருந்து நீண்ட தூரத்தில் நின்ற சக அணியைச் சேர்ந்த பிபின் சிங்கிற்கு பந்தை உதைத்தார். இதை ஏடிகே மோகன் பகான் அணியைச் சேர்ந்த டிரி தடுக்க முயன்றார். ஆனால் துரதிருஷ்டவசமாக அது சுய கோலாக மாறியது. இதனால் ஆட்டம் 1-1 என்ற சமநிலையை அடைந்தது.

45-வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் வீரர் ராய் கிருஷ்ணா பாக்ஸின் இடது புறம் இருந்து அடித்த பந்து கோல்கம்பத்துக்கு மிக நெருக்கமாக விலகிச் சென்று ஏமாற்றம் அளித்தது. முதல் பாதியின் முடிவில் ஆட்டம் 1-1 என சமநிலையில் இருந்தது.

2-வது பாதி ஆட்டம் தொடங் கிய நிலையில் 53-வது நிமிடத் தில் மும்பை வீரர் ரெய்னர் பெர்னாண்டஸின் கோல் அடிக் கும் முயற்சி தடுக்கப்பட்டது. 90-வது நிமிடத்தில் ஏடிகே மோகன் பகான் அணியின் வீரர்கள் சந்தேஷ் ஜின்கான், டிரி ஆகியோர் வசம் பந்து இருந்த போது ஏடிகே மோகன் பகான் வீரர் பார்தலோமெவ் ஒக்பேச் அழுத்தம் கொடுத்தார்.

இதனால் ஜின்கானும், டிரியும் பந்தை தங்களது அணியின் கோல்கீப்பர் அரிந் தம் பட்டாச்சார்யாவுக்கு தட்டி விட்டனர். ஆனால் அவர் பந்தை சரியாக கைப்பற்றவில்லை. இதை சரியாக பயன்படுத்திக் கொண்ட பார்தலோமெவ் ஒக்பேச் பந்தை தன்வசப்படுத்தி பின்னர் சக அணி வீரரான பிபின்சிங்கிற்கு தட்டிவிட்டார். அவர் அதை கோலாகமாற்ற மும்பை அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *