அடையாள அட்டையை மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்ய தமிழகத்தில் இன்று சிறப்பு முகாம்!

முதல் முறை வாக்காளர்கள் தங்கள் அடையாள அட்டையை மின்னணு முறையில் பதிவிறக்கம் செய்வதற்கான சிறப்பு முகாம் தமிழகத்தில் இன்றும் நடைபெறுகிறது.

சட்டமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் 16ஆம் தேதி முதல் டிசம்பர் 15ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் நடைபெற்றன. அதில் 21 லட்சத்துக்கும் அதிகமான முதல் முறை வாக்காளர்கள் இணைக்கப்பட்டனர்.

அவர்களுக்கு வண்ண வாக்காளர் அடையாள அட்டை விரைவு தபால்மூலம் தற்போது அனுப்பப்பட்டுவருகிறது. இந்நிலையில் முதல் முயற்சியாக இ-எபிக் என்ற கைபேசியில் வாக்காளர் அட்டையை பெறும் வசதியை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி முதல் முறை வாக்காளர்கள் , voterportal.eci.gov.in என்ற இணைப்பில் சென்று பதிவு செய்தால் , கைபேசிக்கு வரும் கடவுச் சொல்லை பயன்படுத்தி , மின்னணு வாக்காளர் அட்டையை கைபேசியில் பெறலாம் .

இந்த தொழில்நுட்பம் குறித்து அனைத்து தரப்பினருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தவும், கைபேசியில் இந்த இ – எபிக் ஐ பதிவிறக்கம் செய்வதற்கான செயல்முறையை காட்டவும் இரண்டு நாட்கள் முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது .

அதன் 88,937 வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடி மையங்களில் நேற்று தொடங்கிய முகாம் இன்று நடைபெறுகிறது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *