திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியீடு!

தமிழக சட்டமன்ற தேர்தலின் திமுக தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.  தமிழக சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் தமிழக தேர்தல் களம் பரபரப்படைந்துள்ளது. ஏறக்குறைய அனைத்து கட்சிகளும் தங்கள் தொகுதி மற்றும் வேட்பாளர்களை அறிவித்து விட்டன. திமுக போட்டியிடும் 173 தொகுதியின் வேட்பாளர்கள் பட்டியலை அக்கட்சியின் தலைவர் முக.ஸ்டாலின் அறிவித்தார். இந்த நிலையில் இன்று காலையில் மெரினா கடற்கரையிலுள்ள கலைஞர் சாமாதிக்கு சென்று ஆசிய வாங்கிய மு.க.ஸ்டாலின் கோபாலபுரத்திற்கு சென்று தாய் தாயாளு அம்மாளிடமும் சென்று ஆசி பெற்றார். தொடர்ந்து அண்ணா அறிவாலயத்திற்கு வந்த மு.க.ஸ்டாலின்  திமுகவின் தேர்தல் அறிக்கையை அறிவித்தார். திமுக வின் தேர்தல் அறிக்கையின் உள்ள திட்டங்கள்: திருக்குறளை தேசிய நூலாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும் சட்டப்பேரவை நிகழ்வு நேரலையாக ஒளிப்பரப்படும் ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படும் பெறப்பட்ட மனுக்களுக்கு 100 நாளில் தீர்வு காணப்படும் நகரங்களில் ஆட்சேபம் இல்லாத இடங்களில் வீட்டு பட்டா ரேசனில் ஒரு கிலே அரிசி சர்க்கரை கூடுதலாக வழங்கப்படும் அதிமுக அமைச்சர்கள் மீதான ஊழல் புகார்களை விசாரிக்க தனி நீதி மன்றங்கள் அமைக்கப்படும் பெட்ரோல் ரூ.5 மற்றும் டீசல் ரூ.4 குறைக்கப்படும் நடைபாதை வாசிகளுக்கு இரவு நேர காப்பகங்கள் திறக்கப்படும் தேவாலயங்கள் சீரமைக்க ரூ.200 கோடி ஒதுக்கப்படும் பத்திரைக்கையாளர், ஊடகத் துறையினர் தனி நல வாரியம் அமைக்கப்படும் தொழில் நிறுவனங்களில் 75% தமிழர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்படும் மகளிருக்கான பேறுகால விடுப்பு 12 மாத காலமாக உயர்த்தப்படும் நீட் தேர்வை ரத்து செய்ய முதல் சட்டமன்ற கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்றப்படும் கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் சிறுகுறு விவசாயிகளுக்கு பொங்கல் தமிழர் தேசிய திருநாளாக கொண்டாடப்படும் தமிழ் எழுத்துவரி வடிவம் சிதைக்கப்படுவதை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் தொழிலாளர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் நெல்லுக்கான  குறைந்தபட்ச ஆதார விலை ரூ.2500 ஆக உயர்த்தப்படும் திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தனி அமைச்சகம் அமைக்கப்படும் ஏற்கெனவே நடந்த உள்ளாட்சி தேர்தல் ரத்து இல்லை கூட்டுறவு வங்கிகளில் 5  பவுன்களூகு உட்பட்ட நகைக்கடன் தள்ளுபடி முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு வேலையில் முன்னுரிமை எட்டாம் வகுப்பு வரை தமிழ் கட்டாயம் ஆக்க நடவடிக்கை எடுக்கப்படும் விவசாயிகள் புதிய மின்மோட்டார் வாங்க ரூ.10000 மானியம் வழங்கப்படும் பக்கிங்காம் கால்வாய் சீரமைக்கப்படும் மருத்துவ படிப்புகள் அனைத்தும் மாநிலப் பட்டியலுக்கு மாற்றப்படும் பள்ளி, கல்லூரி மாணவிகளுக்கு இலவச நாப்கின் வழங்கப்படும் 100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தின் பணிநாட்கள் வேலை 150 நாளாக உயர்த்தப்படும் வேலைவாய்ப்பில் பெண்களுக்கு 40% இட ஒதுக்கீடு  வழங்கப்படும் 200 தடுப்பணைகள் ரூ.2000 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும் ரேசனில் உளுந்தம்பருப்பு மீண்டும் வழங்கப்படும் சமையல் எரிவாயுவுக்கு மானியமாக ரூ.100 வழங்கப்படும் பள்ளியில் மாணவர்களுக்கு காலையில் பால் வழங்கப்படும் வேளாண் துறைக்கு தனி நிதி நிலை அறிக்கை அளிக்கப்படும் இந்து ஆலயங்களை சீரமைக்க ரூ.1000 கோடி ஒதுக்கீடு தமிழகத்தில் 500 இடங்களில் கலைஞர் உணவகம் அமைக்கப்படும் ஜல்லிக்கட்டு காளையை வளர்ப்போருக்கு ஊக்கத்தொகையாக ரூ.1000 வழங்கப்படும் தனியார் துறை வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்படும் பகுதி நேர ஊழியர்களாக நிரந்தரமாக்கப்படுவர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *