தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை மையம்!
![](https://thenewslite.com/wp-content/uploads/2021/03/Beautiful_Tirunelveli_under_rain_cloud_shadow_on_19-09-2015-scaled.jpg)
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மார்ச் மாதத்திலேயே தமிழகத்தில் வெயில் சுட்டெரிக்கிறது. இனி வரும் காலங்களில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது. அதனால் மக்கள் தகுந்த முன்னெச்சரிக்கயுடன் இருக்க வேண்டியது அவசியம். ஏனென்றால் இந்த ஆண்டு கனமழை பெய்ததால் வெயிலும் மிக அதிகமாக இருக்கும் என கணிக்கப்பட்டது.
இந்நிலையில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழக தென் மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும். இன்றும் நாளையும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களிலும், 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் தென்மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் லேசான மழை பெய்யும் என அறிவிக்ப்பட்டுள்ளது.
சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 93.2 டிகிரி பாரன்ஹீட்டாகவும் குறைந்த பட்ச வெப்பநிலை 75.2 பாரன்ஹீட்டாகவும் இருக்கும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.