அமமுக 3வது வேட்பாளர் பட்டியல் வெளியீடு: ஸ்டாலினுக்கு போட்டியாக ஆறுமுகம்.. சவால் ‘வெயிட்டிங்’

சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 3-ம் கட்ட அமமுக வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

எதிர்வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும், 65 அமமுக வேட்பாளர்கள் பட்டியல் ஏற்கனவே 2 கட்டங்களாக வெளியான நிலையில், இன்று 130 வேட்பாளர்கள் கொண்ட 3-ம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், திருவொற்றியூர் தொகுதியில் செளந்தரபாண்டியன் போட்டியிடுகிறார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் போட்டியிடும் கொளத்தூர் தொகுதியில் ஆறுமுகமும், அமைச்சர் ஜெயக்குமார் போட்டியிடும் ராயபுரம் தொகுதியில் சி.பி.ராமஜெயம் போட்டியிடுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *