புதுச்சேரி சட்டமன்ற தேர்தல் : காங்கிரஸ் – திமுக தொகுதிகள் அறிவிப்பு

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், திமுக கட்சியானது 13 தொகுதிகளிலும் போட்டியிடுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள ஏப்ரல் 6 ஆம் தேதியன்றே புதுச்சேரியிலும் தேர்தல் நடைபெற உள்ளது. என்.ஆர்.காங்கிரஸ்- அதிமுக – பாஜக கூட்டணி வைத்துள்ள நிலையில், காங்கிரஸ்- திமுக கட்சிகளும் கூட்டணி வைத்து போட்டியிடுகின்றன.

இந்த நிலையில் வரும் புதுச்சேரி தேர்தலில் காங்கிரஸ் கட்சி 15 தொகுதிகளிலும், திமுக கட்சியானது 13 தொகுதிகளில் போட்டியிடுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சிபிஐ மற்றும் விசிக கட்சிக்கு தலா ஒரு தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *