தமிழகத்தில் 5 தொகுதிகளில் நேரடியாக மோதும் காங்கிரஸ் – பாஜக!

தமிழக சட்டமன்ற தேர்தலில் காங்கிரசும், பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக 5 தொகுதிகளில் போட்டியிடுவதால் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே காங்கிரஸ் கட்சிக்கான தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் தொகுதிகள் ஒதுக்கீடு ஒப்பந்தம் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி முன்னிலையில் கையெழுத்தானது.

அதில் உதகை, கோவை தெற்கு, காரைக்குடி, குளச்சல், விளவங்கோடு ஆகிய ஐந்து தொகுதிகளில் காங்கிரஸ் – பாஜக நேருக்கு நேர் சந்திக்கின்றன. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளில் 3 தொகுதிகள் திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரியில் திமுகவின் வாகை சந்திர சேகர் தற்போது எம்எல்ஏவாக உள்ள நிலையில், இந்த முறை அந்த தொகுதி காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *