தமிமுன் அன்சாரி மீண்டும் திமுகவுக்கு ஆதரவு!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிமுன் அன்சாரியின் மனித நேய மக்கள் கட்சி முதலில் திமுகவுக்கு ஆதரவு அளித்தது. பிறகு, தங்களது ஆதரவைத் திரும்பப் பெறுவதாக அறிவித்தது.
இந்நிலையில், இன்று மீண்டும் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக அக்கட்சித் தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில், “ எங்களுக்கு தொகுதி கிடைக்கவில்லை என்பதில் வருத்தம் உள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் வகுப்புவாத, மதவாத கட்சிகள் காலூன்றி விடக் கூடாது என்பதற்காக திமுகவிற்கு எங்களது ஆதரவை அளித்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.