சாத்தூர் எம்.எல்.ஏ அதிமுகவில் இருந்து நீக்கம்!

சட்டப்பேரவை தேர்தலில் சாத்தூரில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அதிருப்தியில் இருந்த அதிமுக எம்எல்ஏ ராஜவர்மன், டிடிவி தினகரன் முன்னிலையில் அமமுகவில் இணைந்தார். இதன்பின் பேசிய அவர், “கட்சிக்கு விசுவாசமாக இருப்பவர்களை வேட்பாளராக நிறுத்தவில்லை. அமைச்சர் ராஜேந்திர பாலாஜியால் தான் எனக்கும் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது என கூறி, சசிகலாவிற்கு செய்த துரோகத்திற்கு மக்கள் உரிய பதிலளிப்பார்கள்” என கூறியுள்ளார்.

இந்த பரபரப்பான அரசியல் சூழலில், சாத்தூர் தொகுதி எம்.எல்.ஏ ராஜவர்மன் அதிமுகவில் இருந்து நீக்கம் செய்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் அறிக்கை வெளியிட்டுள்ளனர். 

அதில், கழகத்தின் கொள்கை, கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்டுப்பாட்டை மீறி களங்கமும், அவப்பெயரும் உண்டாகும் விதத்தில் ஈடுபட்டதாலும், எம்எஸ்ஆர் ராஜவர்மன் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்படுவதாக அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *