மாநில அரசு அமல்படுத்தாத இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது ஏன்? மத்திய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி!

தமிழகத்தில் மாநில அரசு அமல்படுத்தாத இடஒதுக்கீட்டை செயல்படுத்தியது ஏன் என அண்ணா பல்கலைகழகம் மற்றும் மத்திய அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
தமிழகத்தின் அண்ணா பல்கலைகழகத்தில் உயர்படிப்பில் மத்திய அரசு அமல்படுத்திய உயர்சாதி ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீடு பின்பற்றப்பட்டதாக வெளியான செய்தி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுகுறித்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையில் இன்று கேள்வி எழுப்பிய நீதிமன்றம் மாநில அரசு அமல்படுத்தாத இடஒதுக்கீட்டை பல்கலைகழகத்தில் அமல்படுத்தியது ஏன் என மத்திய அரசுக்கு, அண்ணா பல்கலைகழகத்திற்கும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் இதுத்தொடர்பான பதிலை வெள்ளிக்கிழமைக்குள் அளிக்க அண்ணா பல்கலைகழகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது