பாமக கட்சியின் தொகுதி பட்டியல் வெளியீடு!

சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் 23 தொகுதிகளின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஏப்ரல் 6ம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருப்பதால், அதற்கான பணியில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. அந்தவகையில், அதிமுகவில் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு குறித்து கடந்த சில நாட்களாக பேச்சுதை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்பின் அதிமுகவின் 6 பேர் கொண்ட முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

இதனிடையே, அதிமுக கூட்டணியில் முதலில் பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கி ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இதன்பிறகு பாமக போட்டியிட விரும்பும் பட்டியலை அதிமுகவிடம் கொடுத்திருந்தது. விரைவில் பாமக தொகுதிகளின் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்பார்த்த நிலையில், சட்டப்பேரவைத் தேர்தலில் பாமக போட்டியிடும் தொகுதிகளின் விவரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, செஞ்சி, மையம், ஜெயகொண்டம், திருப்போரூர், வந்தவாசி, நெய்வேலி, திருப்பத்தூர், ஆற்காடு, கும்மிடிப்பூண்டி, மயிலாடுதுறை, பொன்னகரம், தருமபுரி, விருத்தாச்சலம், காஞ்சிபுரம், கீழ்பென்னாத்தூர், மேட்டூர், சேலம் மேற்கு, சோளிங்கர், சங்கராபுரம், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, கீழ்வேலூர், ஆத்தூர் ஆகிய இடங்களை அதிமுக ஒதுக்கீடு செய்துள்ளது.

இதனிடையே, வரும் சட்டமன்ற பொதுத் தேர்தலுக்கான அதிமுக கூட்டணியில் 20 தொகுதிகளுக்கான பாஜகவின் தொகுதி பட்டியல் வெளியாகியுள்ளது. மேலும் அதிமுக சார்பில் வெளியிட்டபட்டுள்ள அறிக்கையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிடம் வேட்பாளர்களின் இரண்டாம் கட்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், 171 பேர் கொண்ட அதிமுக பட்டியலை ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் வெளியிட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *