நாடாளுமன்றத்தில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச அனுமதிக்கவில்லை – மல்லிகாா்ஜுன காா்கே!

பெட்ரோல் விலை உயர்வு குறித்து பேச நாடாளுமன்றத்தில் அனுமதிக்கவில்லை என மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகாா்ஜுன காா்கே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாவது பகுதி திங்கள்கிழமை (மாா்ச் 8) தொடங்கியது. இந்நிலையில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்து தொடர்ந்து 3 நாள்களாக அமளியில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து மக்களவை மார்ச் 15ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபைத் தலைவர் அறிவித்தார்.

இதுகுறித்து பேசிய மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் கூறுகையில், பெட்ரோலிய பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பெட்ரோல் விலை இதற்கு முன்பு இவ்வளவு உயர்ந்ததில்லை. நாடாளுமன்றத்தில், அதிகரித்து வரும் எரிபொருள் விலைகள் குறித்த பிரச்சினையை எழுப்ப முயன்றோம், ஆனால் அது குறித்து விவாதத்திற்கு அனுமதிக்கவில்லை எனக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் தலைகவசத்திற்கும் பஞ்சாயத்து செய்யும் அதிமுக

பசும்பொன் முத்துராமலிங்கத்தேவரின் சிலைக்கு அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட தங்க கவசத்திற்கு ஒபிஎஸ் சார்பில்…

தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்தத்தை திரும்பபெறவேண்டும் முத்தரசன் கண்டனம்

நாட்டின் கட்டமைப்பை ஒழித்து கட்ட முயலும் பாஜகவின் நடவடிக்கைகளை கண்டித்தும், மத நல்லிணக்கத்தை…