மதிமுக மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தொகுதிகள் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டது!

திமுக கூட்டணியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மற்றும் மதிமுக  கட்சியின் தொகுதிகளின் ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு கையெழுத்தாகியுள்ளது.

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கடையநல்லூர், வாணியம்பாடி, சிதம்பரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிடுகிறது. ஐயூஎம்எல் கட்சி போட்டியிடும் மூன்று தொகுதிகளிலும் அதிமுகவுடன் போட்டியிடுகிறது. மேலும் அக்கட்சி ஏணி சின்னத்தில் போட்டியிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வைகோ தலைமையிலான மதிமுக கட்சி மதுராந்தகம்(தனி), வாசுதேவநல்லூர்(தனி), சாத்தூர், அரியலூர், மதுரை தெற்கு மற்றும் பல்லடம் ஆகிய ஆறு தொகுதிகளில் போட்டியிடுகிறது. மதிமுக கட்சி ஆறு தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதி தமிழர் பேரவை கட்சி சார்பில் அதியமான் போட்டியிடும் தொகுதியாக அவினாசி அறிவிக்கப்பட்டுள்ளது. முருகவேள் ராஜனின் மக்கள் விடுதலைக் கட்சிக்கு  நிலக்கோட்டை தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும் கூட்டணியில் இருக்கும் காங்கிரஸ், விசிக ஆகிய கட்சிகள் தொகுதிகள் ஒப்பந்தம் குறித்து நாளை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *