அதிமுக டெபாசிட் இழக்கும் – எல்.கே.சுதீஸ்

அதிமுக கூட்டணியில் இருந்து விலகுவது குறித்து தேமுதிகவின் துணை செயலாளர் எல்.கே.சுதீஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் அவர், “தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எட்டப்படவில்லை. அதனால், மாவட்ட செயலாளர்களின் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது. இன்று தான் எங்களுக்கு தீபாவளி. முக்கியமாக கே.பி. முனுசாமி பாமக வின் ஸ்லீப்பர் செல்லாகவும், கொள்கை பரப்பு செயலாளராக செயல்பட்டு வருகிறார்.
இந்தத் தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக டெபாசிட் இழக்கும் “ என தெரிவித்துள்ளார்.