அதிமுக கொடுக்கும் தொகுதிகளை தேமுதிக ஏற்குமா?
சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – தேமுதிக கூட்டணி தொகுதிப்பங்கீட்டில், நான்கு கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகும் இழுபறி நீடித்து வருகிறது.
இந்நிலையில் இன்று, விஜயகாந்த் தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில், தொகுதி பங்கீடு தொடர்பாக விஜயகாந்த் முடிவை ஏற்பது என ஒருமனதாக முடிவுசெய்யப்பட்டுள்ளது. இதனால் அதிமுக ஒதுக்கும் தொகுதிகளை தேமுதிக ஏற்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.