தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி… உதய சூரியன் சின்னத்தில் போட்டி!

திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலை தொடர்ந்து அனைத்து கட்சிகளும் கூட்டணி மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை ஒதுக்கி வருகிறது. இதைத்தொடர்ந்து, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்கு நாடு தேசிய மக்கள் கட்சி , அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி ஆகியவைகளுடன் திமுக தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டுள்ளது.

கூட்டணியில் உள்ள முக்கிய கட்சிகளுக்கு தொகுதிகள் பங்கீடு செய்யப்பட்ட நிலையில், மற்ற கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள தமிழக வாழ்வுரிமைக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அந்த ஒரு தொகுதியிலும் தமிழக வாழ்வுரிமை கட்சி உதயசூரியனில் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *