தமிழக சட்டமன்றத் தேர்தலில் தினகரனுடன் கூட்டு சேரும் ஒவைசி!

தமிழக சட்டசபைத் தேர்தலில் தினகரனின் அமமுக கட்சியுடன்  ஒவைசியின் AIMIM கட்சி கூட்டணி சேர்கிறது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6 ஆம்தேதி வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. மே 2 ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறும் என நேற்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனால் தமிழக அரசியல்களம் சூடுபிடித்துள்ளது.

திராவிட கட்சிகள் மற்ற கட்சிகளுடன் கூட்டணி குறித்தும் தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், தேர்தல் கால நடைமுறைகள் சமீபத்தில் அமலுக்கு வந்த நிலையில், தமிழக தேர்தல் களம் பரபரப்புடன் காட்சியளிக்கிறது. அனைத்து கட்சியினரும் தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அமமுக பொதுச்செயலாளர் தினகரன், உண்மையான தர்மயுத்தம் இப்போதுதான் தொடங்கவுள்ளது எனவும், அமமுக கூட்டணி பற்றி இன்னும் 2 நாட்களில் அறிவிக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்நிலையில், தற்போது அமமுகவுடன் ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சி இணைந்து சட்டசபைத்தேர்தலில் போட்டியிடவுள்ளது. மேலும், தினகரன் தலைமையிலான அமமுக காட்சி ஒவைசியின் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சிக்கு 3 தொகுதிகளை( வாணியம்படி, கிருஷ்ணாபுரம், சங்கராபுரம்) ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *